இன்றையக் கண்ணோட்டம்-(200)
***************************
#மோடியே!
#வாயைக்கொஞ்சம்_திறய்யா
#வாயிலென்ன_கொழுக்கட்டையா?
பிஜேபியின் இரண்டாமாண்டு
ஊழல் பிரளயத்தில் இந்தியாவை
அழித்துக் கொண்டிருக்கிறது.
"எனது ஓராண்டு ஆட்சியில் ஒரு ஊழல் புகாரையாவது சொல்ல முடியுமா?"
என்று எப்போது தனது 6இன்ச் அகலவாயைத் திறந்தாரோ,
அன்றிலிருந்து ஊழல்புகார்கள் சுனாமியாக பிஜேபி RSSஐ சுருட்டிக் கொண்டிருக்கிறது.
உதுத்தபய மோடியோ ஊதாரியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
ஊழல் புகாருக்கு வாயைத் திறக்காமல்
கேள்விகேட்க ஆளில்லாமல் மீடியா முன்பு பேசுவதென்றால் நாக்கை நீட்டி முழங்கும் மோடி, கடந்த ஒருமாதமாக
வசுந்தர,சுஷ்மா, முண்டே,வினோத் தாக்டெ, ராமன்சிங்,ஜெட்லி,ஸ்மிருதி இரானி, இப்போது ம.பி.முதல்வர் சௌகான்.
இதில் நிதின்கட்கரி,பட்னாவீஸ், அரியானா முதல்வர், சதானந்தா கவுடா,
ராஜ்நாத், சுதர்சன் இவர்கள் மீதும் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் ஆதாரத்தை முடக்கி தற்காலிகமாக தப்பித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் பிஜேபி அல்லாத மாநிலக்கட்சிகளையும் ஊழல் வழக்கிலிருந்தும் விடுவித்துள்ளது மோடி அரசு.
(ஜெயா,மம்தா, நவின் பட்நாயக்,)
மேலும், மக்களும் பத்திரிக்கைகளும் ஊழலென்று குறிப்பிடுவது கையோடு பிடிபடும் லஞ்சம், ஊழல்,கமிசனையே
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோடியும் அதன் அடிப்படையிலேதான்
ஓராண்டுமஆட்சியில் ஊழல் இல்லை என்கிறார்.
ஆனால், மோடி அரசின் ஊழல்கள்
முதல்வாரத்திலே தொடங்கிவிட்டது.
அதானியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துப் போனது, இந்து தீவிரவாதி களை எல்லாம் விடுவித்து,
தன்னையும்,அமித்ஷாவையும் விடுவித்துக் கொண்டது, மதவெறி பேச்சுக்களை பேசும்MPக்களை பாதுகாத்தது, கார்ப்பரேட் நாய்களுக்கு மானியம்,வரிச்சலுகை, வரிகுறைப்பாக
10லட்சம் கோடி சலுகை அறிவித்தது,
மதக்கலவர கொலைகாரர்கள் மீது வழக்குகூட பதிவு செய்யாதது
இதெல்லாம் மோடியின் பார்வையில்
அதிகார முறைகேடு இல்லையாம்,
மோசடி இல்லையாம், ஊழல், முறைகேடில்லையாம்.
இதையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட லஞ்ச ஊழலில் நாறிக் கிடக்கிறது RSS,BJP நாய்கள்.
ஊழல் என்றால் பைலை எரிப்பார்கள்
அதிகாரிகளை இடமாறுதல் செய்வார்கள், நீதித்துறையை விலைக்கு வாங்குவார்கள்.
தவிர்க்க முடியாத போது ஒன்றிரண்டு கொலை நடக்கும்.
ஆனால், 12ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் ஆண்டுவரும் பிஜேபி அரசு ,ஊழல் வழக்கில் வேலை வாங்கியவர்கள்,சாட்சி சொல்பவர்,வழக்கை விசாரிக்கப் போகும் பத்திரிக்கையாளர்கள்,
குற்றம்சாட்டப்பட்டோர் என வரிசையாக கொன்றடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்
இதுவரை 48பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
காரணம், முதல்வர்,கவர்னர்,MLA,MP,
IAS,IPS, போலீஸ்,RSSஎன எல்லா நாய்களும் பங்கெடுத்த ஊழல் என்பதால் வரைமுறையில்லாமல் யார் வாய் திறந்தாலும் கொல்கிறார்கள்.
பிஜேபியின் பத்து ஆண்டுகளில், குறிப்பாக 2011லிருந்து கொலைகள் தொடர்கின்றன.
#வியாபம் ஊழல்.
விவசாயிக் பரீக்ஷா மண்டல்
அதாவது, நம்மூரு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் போல
மத்தியப்பிரதேச பணியாளர் தேர்வாணையம்தான் இந்த #வியாபம்.
1.5லட்சம் பேரிடம் 1லட்சம்,2,3லட்சம், சில வேலைகளுக்கு 5,7லட்சமென வாங்கிக் கொண்டு RSS பரிந்துரைத்தவர்கள், பிஜேபி பரிந்துரைத்தவர்கள், பணத்தைக் கொடுத்தவர்களெல்லாம்
அரசுவேலை கொடுத்துள்ளனர்.
அதுவும் போலி கல்விச்சான்றிதழ் வைத்திருப்போருக்கும் அதை தெரிந்தே அரசுவேலை கொடுக்கப் பட்டுள்ளது. சில பேருக்கு போலி கல்விச் சான்றிதழ் இவர்களே எடுத்துக் கொடுத்து வேலை கொடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஊழலில் முதலிடத்திலிருக்கும் ஜெயலலிதாவை யே விஞ்சி நிற்கிறது பிஜேபி கட்சி.
இந்தியாவில் நடந்த மற்ற ஊழல் வழக்கும் இதற்குமுள்ள வேறுபாடு
என்ன வென்றால் ,மற்ற வழக்கில் ஆதாரத்தை அழிப்பார்கள்.
இந்த வழக்கில் ஆதாரத்தை மட்டுமல்ல
சம்மந்தப்பட்ட ஆட்களையும் தொடர்ச்சியாக கொன்று வருகிறார்கள்
வெற்றிவிழா,புலன்விசாரணை,ரத்த சரித்திரம் போன்ற சினிமாக்களை பார்க்கும் போது இத்தனை கொலை நடக்குதே, அந்த ஊருல போலீசே இல்லையா என்று கேலியாக கேட்டதுண்டு.
ஆனால்,ம.பியில் போலீசே இல்லையா என சினிமாவை விஞ்சுமளவுக்கு, பல திருப்புமுனைகளோடு பல திகில் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
போன 10நாட்களுக்குள் 5கொலைகள்
நடந்துள்ளன.
1-ஆம் சாட்சி கொலை, முக்கிய சாட்சி மதன் கொலை,பத்திரிக்கையாளர் அக்சய்சிங் கொலை, டிவி டுடே நிருபர் தாமோதர் கொலை.
கவர்னர் நரேஷ் யாதவ் 10-வது
குற்றவாளி.
வியாபம் மூலம் வேலைக்கு சேர்ந்த பெண் போலீஸ் அனாமிகா கொலை.
ஜபல்பூர் N.Sமருத்துவக் கல்லூரி டீன்
Dr.அருள் சர்மா விடுதியில் மரணம்.
கவர்னர் மகன் மரணம்.
இதன் மூலம் வேலை பெற்ற ரமாகந்த் பாண்டே கொலை.
முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் சர்மா உட்பட 2000பேர் கைதானார்கள் 700பேரை போலீஸ் தேடிக்கொண்டிருக்குதாம்.
ஃப்ரீ மெடிக்கல் வேலையில்தான் அதிக பேரை சேர்த்துள்ளனர். இவர்களை
சிறப்பு விசாரணைபடை விசாரித்துவிட்டு போன பிறகு 8பேரை காணவில்லை. இப்போதுவரை உயிரோடு இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இப்படி காணாமல் போனதாக அரசு கூறுவதுமட்டும் 700பேரைத் தாண்டும்.
இத்தனை நடந்த பிறகும் இதெல்லாம்
தற்கொலை,உடல்நிலை சரியில்லாததால் மரணம். விபத்து மரணமென மபி முதல்வர் சௌகான் சாதிக்கிறார்.
10ஆண்டுகால ஊழல்,5ஆண்டுகால தொடர் கொலைகள். இத்தனை ஆண்டாக சிபிஐவிசாரணையை மறுத்துவந்த சௌகான் பாதி ஆதாரத்தை மூடியபிறகு இப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிபிஐ என்பது மத்தியஅரசின் டாய்லெட் பேப்பர் என்பதும் காங்கிரஸ் ஆட்சியில் கூட மோடியை விசாரித்து க்ளீன் சீட் கொடுத்ததுதான் சிபிஐ என்பதும்
இப்போது சிபிஐயில் எல்லாம் RSS குரங்குகளையே நியமித்திருப்பதாலும்
சௌகானை ஒன்றும் செய்யப் போவதில்லை.
RSSதலைவராக இருந்த சுதர்சனின் உதவியாளராக பணிபரிந்த மிகில் குமாரை RSSதுணைப் பொதுச் செயலாளர் சுரேஷ் சோனியும் சுதர்சனும் இவரை நேரடியாக தேர்ந்தெடுக்க பரிந்துரைத்தனர் அவரும் புட் இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்தார்.
அங்குள்ள NGOக்களும் "அவசரக் கோலத்தில் RSSஆட்களையும்,பணம் கொடுத்தவர்களையும் வேலைக்கு நியமித்துள்ளனர் "என்கிறார்கள் .
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் நேரடி பார்வையில் சிபிஐ விசாரணையில் நடைபெறுகிறதாம்.
ஏற்கெனவே உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடந்த ஜெயலலிதா வழக்கு, 2ஜி, வழக்குகளின் லட்சணத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதுவும், வழக்கம் போல் மோடியின் கைப்புள்ள L.Kதத்து தானாக அவரே வழக்கை எடுத்து விசாரிக்கப் போகிறாராம்.
உச்சநீதிமன்றத்திலும்,உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளும் அரசியல் வாதிகளின் ஊழல் வழக்கை விசாரிக்கப் போட்டிபோட்டுக் கொண்டு வழக்கை எடுக்கிறார்களாம்.
நீதியைக் காப்பாற்ற அல்ல
ஒரு வழக்கை விசாரித்தாலே லைப் செட்டிலாகிவிடுமென்கிறார்களாம்.
அதிலும் இந்த தத்து உலகிலேயே மோசமான நீதிபதி.
ஜெயாவுக்கு விடுதலை தரச் சொன்னவர்,ஜெயாவுக்கு விடுதலை தரப்போகின்றவர், இப்போது இந்த வியாபம் ஊழல் வழக்கையும் இவர்தான் விசாரிக்கப் போகிறாராம்.
அப்படியென்றால், இந்த வழக்கின் கதி என்னவாகுமென்பதை சொல்லவும் வேண்டுமா?
40000கோடி மதிப்பிலான ஊழல்
என்பதால் மட்டுமல்ல இந்த கொலைகள். பிஜேபி,RSSசில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்புடையது என்பதாலும்,
அவர்களது அரசியல் வாழ்வே முடிவுக்கு வந்துவிடும் என்பதால்தான் வெறி பிடித்து தேடித்தேடி கொல்கிறார்கள்.
இவ்வளவு நடந்த பிறகும் மவுனச் சாமியாராக ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறார். வந்ததும் காஷ்மீரில் நோன்பில் கலந்து கொண்டு சீன்காட்டப் போகிறாராம்.
அடுத்தமாதம் சுற்றப் போகும் ஊர்களையும் அறிவித்து விட்டனர்
பாகிஸ்தான், 2-வது முறையாக ரஷ்யாவுக்கு பயணம்.
இனி ஊழலைப்பற்றிப் பேச மோடி அரசுக்கு எந்த யோக்யதையுமில்லை.
-#புஷ்கின்.
No comments:
Post a Comment